முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நான் தான் தலைவர்: நிதீஷ்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,மே.22 - பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நான்தான் தலைவர் என்று நிதீஷ்குமார் கூறியுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை நிறுத்த அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

இதனால் பா.ஜ,க.வுக்கும் நிதிஷ்குமாருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் ததனது அணிக்கு இழுக்க முயற்சி செய்துவருகிறது. அவரை திருப்திபடுத்தும் வகையில் பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. 

இதற்கிடையே பா.ஜ.க. துணைத்தலைவர் பரபாத்ஜா கூறுகையில் நரேந்திரமோடியை பிரதம வேட்பாளராக நிறுத்துவதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாட்டிலேயே நரேந்திர மோடிதான புகழ்பெற்ற தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கே வலியுறுத்தியுள்ளார் என்றார். மேலும் அவர் கூறுகையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு எங்கள் கூட்டணியில் இருப்பது அவசியம் ஆகிறது. எனவே அவர் காங்கிரஸ் பக்கம் போகமாட்டார் என்றார். 

இதற்கு நிதிஷ்குமார் பதில் அஅளிக்கையில் பீகாரில் நான்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவராக இருக்கிறேன். இதனால் பாரதிய ஜனதாவுக்கும்,ஐக்கிய ஜனதா தளத்திற்கு மோதல் முற்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்