முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 1,400 கோடி ஊழல் புகாரால் மாயாவதிக்கு நெருக்கடி

புதன்கிழமை, 22 மே 2013      ஊழல்
Image Unavailable

லக்னோ, மே. 23 - உ.பி.யில் நினைவிடங்கள் அமைப்பதில் நடந்த ஊழல் புகாரால் மாயாவதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் தலித் தலைவர்களுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக மாயாவதி அரசு ரூ. 1,410 கோடி செலவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசின் பல்வேறு துறைகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்க துறைக்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து நினைவிடங்கள் அமைப்பதற்காக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் சட்ட விரோதமாக ஏராளமான அளவில் கிரானைட் மற்றும் மணல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய முதல்வர் மாயாவதி உட்பட உயரதிகாரிகள் 199 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் மேல் விசாரணை நடத்த முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இவற்றை விசாரணை செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில் லக்னோ, நொய்டாவில் அமைக்கப்பட்ட நினைவிடங்களில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கை கிடைத்ததும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் மாயாவதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே சி.பி.ஐ. சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்