முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே சிறைக்கு நடிகர் சஞ்சய் தத் மாற்றம்

புதன்கிழமை, 22 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 23 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து புனே எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் 1993 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 6 ஆண்டு சிறை தண்டனை சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த தண்டனை 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய்தத் மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 16 ம் தேதி சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, தலையணை. மருந்துகள் வழங்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago