முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் மவுனத்தால் மோசமான சூழ்நிலை: பா.ஜ.க

புதன்கிழமை, 22 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.24  - மத்தியில் இரட்டை அதிகாரம், பிரதமர் மன்மோகன் சிங்கின் மவுனத்தந்மையால் நாட்டில் மோசமான சூழ்நிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா கடுமையாக தாக்கியுள்ளது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது முறை ஆட்சியில் அமைந்து 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டில் அடி வைத்துள்ளது. இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் மத்தியில் இரட்டை அதிகாரம், பிரதமர் முடிவு எடுக்க முடியாத நிலை, இயலாத நிலை, மவுனம் ஆகியவைகளால் நாட்டில் ஒரு இருண்ட, மோசமான சூழ்நிலையை உருவாக்கும் நிலை உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வியே ஏற்பட்டுள்ளது என்று ஆவர்கள் கூறியுள்ளனர். ஆட்சியின் 4 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. நாட்டில் ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் அரசுக்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ள நிலையிலும் 4-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த அரசானது ஒரு தலைமையை அளிக்க தவறிவிட்டது. கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. பொருளாதாரத்தை முன்னேறச் செய்வதிலும் ஊழலை தடுத்து நிறுத்துவதிலும் அரசு தவறி என்று அவர்கள் கூறியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும் இந்த அரசு தவறிவிட்டது. ஆட்சியின் அதிகாரம் மன்மோகன் சிங்கிடம் இல்லை. அதனால் ஐக்கிய முற்போக்கு அரசானது அடிப்படையிலேயே தவறானது. பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறார். ஆனால் அவர் நாட்டின் தலைவராகவோ அல்லது ஒரு கட்சியின் தலைவராகவோ இல்லை. கேபினட் கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் உட்காருகிறார். ஆனால் ஒரு முடிவு எடுக்க சோனியா காந்தியின் முகத்தைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். கூட்டத்தில் சோனியா காந்தி எடுப்பதுதான் முடிவாகும். இந்த பிளவுபட்ட முறையானது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெரும் தோல்வியாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது பிரதமரின் மதிப்பை குறைத்துவிட்டது என்றும் அந்த பேட்டியில் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்