முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சமின்றி யாருக்கும் சாதகமின்றி சி.பி.ஐ. பணியாற்ற வேண்டும்-மன்மோகன் சிங்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 1 - சிறிதும் அச்சமின்றியும் யாருக்கும் சாதகமாக இல்லாமலும் சி.பி.ஐ. அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் சி.பி.ஐ. அமைப்பின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங் புதிய தலைமை அலுவலகத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது பேசிய அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் சிறிதும் பயமின்றியும் யாருக்கும் சாதகமாக இல்லாமலும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மிகப்பெரிய வழக்குகளை கையாளும்போது அது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒரு சோதனையாகத்தான் இருக்கும் என்று கூறிய அவர், சி.பி.ஐ. புலனாய்வு என்பது பழிவாங்வதாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துவதாகவும் அந்த புலனாய்வு இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். எனவே சி.பி.ஐ. அதிகாரிகள் பயமின்றி செயல்பட வேண்டும். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின்முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டத்தின் குரல்வளையை நெறிப்பவர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகள் ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றன. நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் பாராட்டினார். சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இரண்டாவது குற்றப்பத்திரிகை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. கனிமொழி ஒரு கூட்டு சதியாளர் என்று சி.பி.ஐ. அதில் குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்