முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத் தான் அனுமதிக்க வேண்டும்

புதன்கிழமை, 22 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.23 - பள்ளிகளில் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வித்யா சஹாயக் நியமனம் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் பி.எஸ்.செளகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் கல்வி போதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், கல்வி தகுதி விதிமுறைகளை பின்பற்றாமல் மாநிலங்கள் ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நியமன முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், விளம்பர அணுகுமுறையானது கல்வி முறையின் அடிப்படையையே சீர்குலைத்துவிடும் என்றனர். ஆரம்ப பள்ளிகளில் இந்த மாதிரி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசு பின்பற்றும் விதிமுறைகளை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குஜராத் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் விபரம், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த ஒரு பட்டியலை தரும்படியும் குஜராத் அரசிடம் சுப்ரீம்கோர்ட்டு கோரியுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே கல்வியை போதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வித்யா சஹாயக் (பயிற்சி பெறாத) ஆசிரியர்கள் நியமனம் குறித்த கல்வி தகுதி, நியமன முறை, நியமன காலம் உள்பட அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம் விஷயமாக சட்டப்பிரிவு 21 ஏ இருக்கிறது. இந்த மாதிரியான விதிமுறைகள் இருக்கும்போது இந்தமாதிரி பயிற்சி பெறாத ஆசிரியர்களை ஏன் நியமனம் செய்யப்படுகிறது. இது கல்விமுறையை முழுமையாக சீர்குலைப்பதோடு நாட்டின் எதிர்காலத்தையே அடியோடு பாதிக்கும் என்றும் நீதிபதிகள் வருத்தப்பட கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்