முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுரேனியத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி

புதன்கிழமை, 22 மே 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மே. 23 - கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. யுரேனியம் கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக் கிடப்பதாக கண்டறிந்த விஞ்ஞானிகள் அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாகவே ்ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, யுரேனியத்தை கடல் நீரில் இருந்து பிரிப்பது குறித்த ஆய்வை அமெரிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் ரசயான துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தீவிர முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக கடல்நீரில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்டது. நவீன தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி ஆய்வகத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்