முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் வெடிமருந்து ஆலையில் விபத்து: 13 பேர் பலி

புதன்கிழமை, 22 மே 2013      உலகம்
Image Unavailable

 

பீஜீங்,மே.23 - சீனாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விப்த்தில் 13 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாயினர். சீனாவின் கிழக்கு பகுதியில் ஷாண்டாங் மாகாணம் கவ்பான் நகரில் அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. 168ஏக்கரில் உள்ள இந்த தொழிற்சாலையில் 30 ஆயிரம் டன் வெடி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது வெடிமருந்து கிடங்கில் இருந்து பயஙகர சத்தம் கேட்டது. இதில் கட்டிடம் இடிந்து தரை மட்டம் ஆனது. இடிபாடு, விபத்தில் சிக்கி 13 பேர் இறந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உளளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

விபத்து நடந்த இடத்தில் வேலை செய்து வரும் 20 க்கு மேற்பட்டோரை காணவில்லை. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ஜிலின் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஏபரல் முதல் வாரத்தில் 3 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த பயங்கர வெடி விபத்தில் 36 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்