முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கணக்கு தணிக்கை குழு புதிய தலைவர் பதவி ஏற்பு

வியாழக்கிழமை, 23 மே 2013      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.24 - மத்திய கணக்கு தணிக்கைக்குழு (காக்) தலைவராக ஷசி காந்த் சர்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சர்மாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு துறையையின் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் அதிகாரம் மத்திய தணிக்கை குழுவுக்கு உள்ளது. இந்த குழுவின் தலைவராக வினோத் ராய் இருந்தார். இவர் கடந்த புதன்கிழமையுடன் ஓய்வு பெற்றுவிட்டார். இவரது பதவிக்காலத்தில்தான் மிகப்பெரிய ஊழல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம், ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல்களை அம்பலப்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா பதவி விலகக்காரணமாக இருந்தது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம்தான். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டது இந்த ஊழலால்தான். மேலும் நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கப்பட்டதில் நடந்த ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலால் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் காக் தலைவராக இருந்த வினோத் ராய் பதவிக்காலம் நேற்றுமுன்தினத்தோடு முடிவடைந்தது. அவருக்கு பதிலாக ஷசி காந்த் சர்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். 61 வயதாகும் சர்மா, பீகார் மாநிலத்தில் இருந்து கடந்த 1976-ம் ஆண்டு பீகார் மாநில பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றார். தற்போது ராணுவ செயலாளராக அவர் இருக்கிறார். யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் பட்டம் பெற்றார். மத்திய நிதித்துறையில் பல பதவிகளை வகித்தவர். மேலும் ராணுவ அமைச்சகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக பல பதவிகளை வகித்தவர். காக் தலைவர் பதவியில் சர்மா 6 ஆண்டுகளோ அல்லது 65 வயதை அடையும் வரையோ பதவியில் இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago