முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் - சோனியா - ராகுல் கூட்டாக பிரசாரம் செய்ய முடிவு

வியாழக்கிழமை, 23 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.24 - பிரதமர் மன்மோகன் சிங் மீது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மழுநம்பிக்கை தெரிவித்துள்ளனர். லோக்சபை தேர்தலின்போது கூட்டாக பிரசாரம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பவன் குமார் பன்சால் மருமகன் விவகாரம், சி.பி.ஐ. அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் காரணம் என்று சோனியா காந்தி கூறியதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் வலியுறுத்தி வருகிறது. மத்தியில் இரட்டை அதிகாரம் இருக்கிறது என்றும் மன்மோகன் சிங் மவுனமாக இருக்கிறார் என்றும் பாரதிய ஜனதா குற்றஞ்சாட்டி வருகிறது. அதனால் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகி விடுவாரோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பதவி விலகினால் காங்கிரசுக்கு அது பலவீனமாகிவிடும் என்றும் வரும் லோக்சபை தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பாக விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பேசும்போது பிரதமர் மன்மோகன் சிங் மீது முழு நம்பிக்கை வைத்தனர். வரும் லோக்சபை தேர்தலின்போது அனைவரும் இணைந்து பிரசாரம் செய்வோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். எனக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது ஆதாரமற்றது என்று சோனியா காந்தி கூறினார். எதிர்க்கட்சிகளின் இடைவிடாமல் குற்றச்சாட்டுக்களையும் தகாத வார்த்தைகளை கூறி வந்தாலும் பிரதமர் மன்மோகன் சிங் தனது கடமையை கண்ணியத்துடன் செய்து வருகிறார். 

காங்கிரசுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது எதிர்க்கட்சிகள் உருவாக்கியதாகும். வரும் 2014-ம் ஆண்டில் லோக்சபை தேர்தல் நடக்கவுள்ளதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்கை ஓரம் கட்டுவதாக கூறப்படுவதை ராகுல் காந்தி அடியோடு மறுத்தார். இந்த விஷயத்தில் நான் பல முறை விளக்கம் அளித்துள்ளேன் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்