முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகவில் எம்.எல்.சி. ஒருவருக்கு பதவி: சோனியா

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 25 - கர்நாடக புதிய அமைச்சரவையில் எம்.எல்.சி. ஒருவருக்கு பதவி வழங்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2 நாள் பயணமாக புது டெல்லி சென்றுள்ள அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அமைச்சரவையில் காலியாக உள்ள 5 இடங்களை நிரப்புவது, அமைச்சரவையில் எம்.எல்.சி. ஒருவருக்கு பதவி வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. சோனியா காந்தியை சந்தித்த பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பாக சட்ட மேலவை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். சட்ட மேலவை உறுப்பினருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கவில்லை என்ற அதிருப்தி காணப்பட்டது குறித்து சோனியாவிடம் எடுத்துரைத்தேன். 

அந்த விவாதத்தின் பயனாக சட்ட மேலவை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக்க சோனியா காந்தி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே சட்ட மேலவை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக்குவோம். அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் சோனியா காந்தியுடன் ஆலோசித்தேன். அதன் விபரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்றார். 

அமைச்சரவையில் இடம் பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியை சேரந்த சட்ட மேலவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். பாட்டீல், மோட்டம்மா, வீரண்ணமத்திக்கட்டி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்தின் ஆதரவை பெற முயற்சித்து வருகிறார்கள். சட்ட மேலவையில் காங்கிரசுக்கு 17 உறுப்பினர்கள் இருந்தாலும் மூத்த உறுப்பினர்கள் என்றளவில் எஸ்.ஆர். பாட்டீல், மோட்டம்மா, வீரண்ணமத்திக்கட்டி ஆகிய மூவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago