முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் புதிய அன்னதான வளாகம் ஜூலை 7 ல் ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

திருப்பதி,மே.- 1 - திருமலையில் ரூ. 34 கோடி மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 ம் தேதி திறந்து வைக்கிறார். திருமலையில் இறைவனை வழிபட்டு மனநிறைவு பெறுகின்ற பக்தர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் திட்டத்தை 1985 ல் அப்போதைய முதல்வர் என்.டி. ராமாராவ் தொடங்கி வைத்தார். இதற்காக கோயில் நிர்வாகம் அன்னதான வளாகம் கட்டி 12 மணி நேரம் உணவு வழங்கி வந்தது. தினமும் இத்திட்டத்தின் கீழ் 2000 பக்தர்கள் பயனடைந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. தற்போத நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை உணவு உண்டு வருகின்றனர். எனவே அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் தற்போது ரூ. 34 கோடி மதிப்பில் புதிய அன்னதான வளாகத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து உண்ணும் படி வடிவமைத்துள்ளது. இந்த புதிய அன்னதான வளாகத்தை வரும் ஜூலை மாதம் 7 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு அளிக்க உள்ளார் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்