முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியில் 75,000 பேர் படுகொலை மம்தா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா

தனேகாளி,மே.- 1 - மேற்கு வங்காளத்தில் கடந்த 34 ஆண்டு மார்க்சிஸ்ட் ஆட்சியில் 75 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.  மேற்கு வங்கத்தில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நான்காவது கட்ட தேர்தல் வரும் 3 ம் தேதி 63 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதற்காக ஹூக்ளி மாவட்டம் தனேகாளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது,
கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் எதையும் சாதிக்கவில்லை. மாறாக 75 ஆயிரம் மக்களை கொன்று குவித்துள்ளது. திரிணாமுல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும். நிலம் இல்லாதோருக்கு நிலம் வழங்குவோம். மேற்கு வங்காளத்தை திவாலாக்கி உள்ள மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் நீடிக்க தகுதியில்லை. மாநிலத்தில் பல்வேறு முறைகேடுகளில் சம்பாதித்த பணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யாருடைய பணத்திலும் செயல்படவில்லை.
நாங்கள் ஊழல் கறை படியாதவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே மக்கள் ஒரு ஓட்டு கூட வீணாக்க கூடாது. திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்