ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வீட்டில் பேய்?

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      உலகம்
Image Unavailable

டோக்கியோ, மே. 27 - கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷின்சோ அபே. அரசு சார்பில் இவருக்கு தனி வீடு ஒதுக்கப்பட்டும், இன்னும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக நிலவும் அச்சமே பிரதமர் அங்கு குடியேறாததற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டும். பிரதமர் அங்கு குடியேறாததால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, தாமதம் ஏற்பட்டுள்ளன. எனவே இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் அந்த வீட்டில் குடியேறாததற்கு பேய் பீதி காரணம் அல்ல என்று அமைச்சரவை சார்பில் பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: