முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் 260 கோடி தலித்துக்கள் பாதிப்பு: ஐ.நா

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      உலகம்
Image Unavailable

நியூயார்க், மே. 27 ​- சாதி பாகுபாட்டின் அடிப்படையில் உலகில் 26 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தலித்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என குறிப்பிட்டுள்ளது. உலக மக்களை சாதியின் அடிப்படையில் பிரித்து, அவர்கள் மீது செலுத்தப்படும் ஆதிக்கங்களை, பாரபட்சமங்களைக் கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்தது. அவர்களின் கணக்கெடுப்பின் படி, உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப்பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளனராம். அதிலும் குறிப்பாக, தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்கள் அதிகம் என்றும், அவர்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இவர்களது அறிக்கையில், உலகம் முழுவதும் சாதி அடிப்படையிலான பாரபட்சம் பரவிக் கொண்டும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாதிக் கொடுமைகளினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தலித்துகள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று தெரிய வந்துள்ளதாகவும் ஐ. நா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்