மிருகங்களை கொல்லக்கூடாது: இலங்கை துறவி தீக்குளிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மே. 27 - மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, புத்த துறவி ஒருவர் இலங்கையில் தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி புத்தமத அமைப்பு ஒன்று இலங்கையில் போராட்டத்தில் ்ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா என்ற இடத்தில் புத்தர் கோவில் முன்பு தீக்குளித்தார். கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார். அவரின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: