முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு தலா ரூ.5 லட்சம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      இந்தியா
Image Unavailable

ராய்பூர்,மே.27 - மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சரமாரியாக சுடப்பட்டு பலியான 27 பேர்களின் குடும்பத்தார்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். மேலும் ராய்ப்பூர் மருத்துவனையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். மாவோயிஸ்ட்களால் சுடப்பட்டு பலியானவர்களின் உடல்கள் ராய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் சென்று பார்த்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், துப்பாக்கிகுண்டு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதலில் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க முன்னுரிமை கொடுக்கப்படும். மாவோயிஸ்ட்கள், நக்சலைகளை ஒழிக்க நான் அனைவரும் சேர்ந்து போராடுவோம் என்றும் மன்மோகன் சிங் கூறினார். மாவோயிஸ்ட்களின் இந்த தாக்குதல் ஜனநாயகத்தில் ஒரு கறுப்புப்புள்ளி என்றும் மேலும் அரசியலின் ஆணிவேரையே இது அறுக்கும் செயலாகும் என்றும் பிரதமரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்