முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு எதிரான பிரமாண பத்திரம் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாதுகாப்பு வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா

ஆமதாபாத்,மே.- 1 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்ப பெற்றுக் கொண்டது. 2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் தொடர்புண்டு என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை சஞ்சய்பட் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது பிரமாண பத்திரத்தில் நரேந்திரமோடி தலைமையில் 2002 ம் ஆண்டு பிப்ரவரி 27 ல் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் பேசிய மோடி, இந்துக்கள் தங்கள் கோபத்தை காட்ட அனுமதிக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் தான் பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் சஞ்சய்பட் தெரிவித்திருந்தார். தனக்கும் தனது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு அளிக்க சி.பி.ஐ. பரிந்துரைத்தது. எனினும் மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்காமல் 5 போலீசாரை மட்டும் நியமித்தது. இந்நிலையில் அந்த பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago