இலங்கை அதிபர் ராஜபக்ஷே சீனா புறப்பட்டுச் சென்றார்

திங்கட்கிழமை, 27 மே 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மே.28 - இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே 4 நாள் அரசுப் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். சீனாவில் பல ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சீன அதிபர் ஸீசின்பிங்க் அழைத்ததன் பேரில் ராஜபக்ஷே, சீனா சென்றுள்ளார். 

சீனாவில் புதிய அதிபர் பதவியேற்ற பிறகு அவர் சீனா சென்றுள்ளார்.  இம்மாதம் 27-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை அவர் சீனாவில் சுற்றுப்யணம் செய்கிறார். அப்போது இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு பல கோடி மதிப்பிலான உதவிகளை சீனா வழங்கும். அதன் மூலம் இலங்கை தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ளும். இதற்கிடையே 580 மில்லியன் அளவுக்கு உதவி செய்யப்போவதாக சீன வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. 

2005-ம் ஆண்டு இலங்கை அதிபராக ராஜபக்ஷே பதவியற்றார். அதற்குப் பிறகு அவர் 6-வது முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளார். ராஜபக்ஷே அதிபராக தேர்வுசெய்யப்பட்ட உடன் அவரை சீனாவுக்கு வருமாறு அழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு பல உதவிகளை சீனா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: