முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி: தவார் கெலோட்

திங்கட்கிழமை, 27 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.28 - அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அதன் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்  கெலோட் கருத்து தெரிவித்தார். இதுபற்றி பாஜக செயலாளர் தவார் சந்த் கெலோட் கூறியதாவது:

வெளிநாடுகளில் மதிக்கப்படும் ஒரே இந்திய தலைவர் மோடிதான்.    புகழ்பெற்ற தலைவர் மோடிதான் என்று பர்லிமென்டரி போர்டு உணர்ந்துள்ளது.  பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்போது கட்சி மக்களின் உணர்வுகளை மதித்து முடிவு எடுக்கும். இதுதொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். லோக்சபா தேர்தல் நடைபெறும்போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று கட்சி அறிவிக்கும். 12 பார்லிமென்டரி போர்டு உறுப்பினர்களில் மோடியும்  ஒருவர் என்பதால், இக்குழு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்போது இது கவனத்தில் கொள்ளப்படும். மோடி பற்றி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் குறிப்பிட்டது பற்றி கேட்டபோது அனைத்தும் சரியான நேரத்தில், சரியானபடி தீர்த்து வைக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்