முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் வெயிலுக்கு 1000 மேற்பட்டோர் பலி..!

திங்கட்கிழமை, 27 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மே. 28 - ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் தொடர்ந்த அந்த மாநிலத்தில் அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வெய்யிலுக்கு மேலும் உயிர்ப்பலி அதிகிர்க்கும் என்று அஞ்சப்படுகிறது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெய்யில் அடித்து வருகிறது. இந்த சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு நேற்றுமட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் எ ன்று கூறப்படுகிறது. இதை சேர்த்து இதுவரை சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பலி எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார். அனல் காற்று வீசுவது கடுமையாகக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும் வெய்யிலுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.   

வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும், இதனைப் பெறுவதற்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நேற்று வரை கடலோர மாவட்டமான குண்டூரில் அதிகபட்சமாக 95 பேர் வெயிலின் கடுமையை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.இதேபோல் பிரகாசம் மாவட்டத்தில் 75 பேரும், கிழக்கு கோதாவரியில் 60 பேரும், நல்கொண்டா மாவட்டத்தில் 47 பேரும், அதிலாபாத் மற்றும் கரீம் நகர் மாவட்டத்தில் தலா 43 பேரும் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினத்தில் கடுமையான வெயில் காணப்படும் எனவும், வாரங்கல், கரீம் நகர் மற்றும் தெலுங்கானாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமாநிலங்களில் அனல் வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் வெப்பநிலை குறையவில்லை. டெல்லியின் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 43 புள்ளி 6 டிகிரி செல்சியஸாக இருந்தது.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரில் 43 புள்ளி 5 டிகிரி வெப்பநிலையும் ஜெய்ப்பூரில் 41. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது.அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலம் எத்வா நகரில் அதிகபட்சமாக 46 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்