முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் இறுதிப் போட்டி: மும்பை இந்தியன்ஸ்-க்கு கோப்பை

திங்கட்கிழமை, 27 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, மே. 28 - ஐ.பி.எல். -6 போட்டியில் கொல்கத்தா வில் நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 24 ரன் வித் தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து கோப்பையை க் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் சென்னை அணி 3-வது முறையாக கோப்பையைக் கைப் பற்றி சாதனை படைக்கும் என்று ரசிகர் கள் எதிர்பார்த்தனர். ஆனால் சென்னை அணி ஏமாற்றம் அளித்தது. 

கேப்டன ரோகித் சர்மா தலைமையி லான மும்பை அணி ஐ.பி.எல் . போட்டியில் முதன் முறையாக கோப்பையை வென்று முத்திரை பதித்து உள்ளது. 

பெப்சி கோப்பைக்கான ஐ.பி.எல். இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதா  னத்தில் நேற்று முன் தினம் இரவு நடந் தது. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் களம் இறங்கின. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பேட்டிங் கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய அந்த அணி ரன் எடுக்க தடுமா றியது. 

இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பி ற்கு 148 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் 1 வீரர் அரை சதம் அடித்தார். 

மே.இ.தீவு வீரரான பொல்லார்டு அதி ரடியாக ஆடி 32 பந்தில் 60 ரன்னை எடு த்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக் சர் அடக்கம். தவிர, ராயுடு 36 பந்தில் 37 ரன்னையும், திணேஷ் கார்த்திக் 21 ரன் னையும், ஹர்பஜன் சிங் 14 ரன்னையும், எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், டிவைன் பிராவோ 42 ரன்னைக் கொடுத்து 4 விக் கெட் எடுத்தார். தவிர, மார்கெல் 2 விக் கெட்டும், எம். சர்மா மற்றும் மோ ரி ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

சென்னை அணி 149 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மும் பை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்னை மட்டுமே எடுத்தது. 

இதனால் இந்த இறுதிச் சுற்றில் மும்பை அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

சென்னை அணி தரப்பில் கோப்டன் தோனி அதிகபட்சமாக, 45 பந்தில் 60 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கமால் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, விஜய் 18 ரன்னையும், டிவைன் பிரா வோ 15 ரன்னையும், மார்கெல் 10 ரன் னையும், அஸ்வின் 9 ரன்னையும் எடுத் தனர். 

மும்பை அணி சார்பில், மலிங்கா ஜான் சன் மற்றும் ஹர்பஜன் சிங் தலா 2 விக் கெட்டும், ஓஜா, ஆர். தவான் மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக பொல்லார்டும், தொடர் நாயகனாக ஷேன் வாட்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்