முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்திடம் நஷ்ட்ஈடு கேட்டு தமிழக அரசு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை,மே.29 - தமிழக அரசு கர்நாடகா மீது சுப்ரிம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 2480 கோடி கர்நாடக அரசு நஷ்ட ்ஈடு தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.மே 9-ந் தேதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகா, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிடவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கர்நாடக அரசு மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி கடந்த 9ம் தேதி நஷ்ட ்ஈடு கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கர்நாடகம், ரூ.2480 கோடி நஷ்ட ஈ்டு தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா பாசன பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பு இருந்தது.

எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வற்புறுத்தியது. இதுதொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடப்பட்டது. நடுவர் மன்றம் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தனர். எனவே கர்நாடக அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி இப்போது தமிழக அரசு கர்நாடகா மீது சுப்ரிம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. மே 9-ந் தேதி வழக்கு தாக்கல் செய்யப்படப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

காவிரி தீர்ப்பாயம் உத்தரவின்படி 2012-13 ஆண்டில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மின் உற்பத்தி மற்றும் விவசாய சார்பு பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பிடாக ரூ.1045 கோடியே 70 லட்சம் கர்நாடகா தர உத்தரவிடவேண்டும்.

மேலும் தீர்ப்பாயம் 2012-13-ம் ஆண்டில் 58.18 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும் அதை வழங்காததால் அதற்கு ரூ. 1434 கோடி நஷ்ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

கர்நாடகாவில் போதிய தண்ணீர் இருந்தது. வேண்டுமென்றே அவர்கள் தண்ணீர் திறந்து விடவில்லை. அதே நேரத்தில் அந்த தண்ணீரை தங்களது மாநில விவசாயிகளுக்கு திருப்பிவிட்டு சட்டத்துக்கு விரோதமாக பயனடைந்துள்ளனர். இதன் மூலம தமிழ்நாடு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 2480 கோடி கர்நாடக அரசு நஷ்ட ஈ்டு தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவிரியில் போதிய தண்ணீர் விடாததால் உணவு உற்பத்தியில் ரூ. 685 கோடியே 80 லட்சமும், மின் உற்பத்தியில் ரூ. 268 கோடியே 50 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது. காவிரி பாசனம் மூலம் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும். போதிய தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நிறுத்தப்பட்டதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்