முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ம் உ.கோ. கால்பந்து போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை,மே.29 - பிபா சார்பில் 2022 -ம் ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். நவிமும்பை பகுதியில் பாதர் ஏக்னல் பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர் மேற்கண்டவாறு கூறினார். 

கோகோ கோலா கோப்பைக்காக தே சிய அளவில் நடைபெற்ற 15 வயதிற் குட்பட்டோருக்கான சப் ஜூனியர் கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங் கேற்ற அவர் இளம் வீரர்களை ஊக்கப் படுத்தும் வகையில் மேற்கண்டவாறு பேசினார். 

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி யில் மேகாலயா மற்றும் ஒரிசா அணிகள்  கோப்பைக்காக மோதின.இதில் மேகாலயா அணி 1- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. 

கத்தார் நாட்டில் 2022 -ம் ஆண்டு உலக க் கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு டெண்டுல்கர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மாணவர்கள் மத்தியில் மேலும் பேசிய தாவது - 2022 -ம் ஆண்டு இந்திய கால்பந்திற்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். 

இதில் இந்திய அணி உலகக் கோப்பை க்கு தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன். இது உங்களது இலக்காக இருக்கட்டும். மூத்த வீரர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள். அவர்களை பின்பற்றி உங்களது கனவுகளை நிறைவேற்று ங்கள். 

நீங்கள் பங்கேற்கும் விளையாட்டில் முழுக் கவனத்தையும் செலுத்தி ஈடு பாடாக செயல்படுங்கள். நீங்கள் அதி ல் அதிக கவனம் செலுத்தும் பட்சத்தில் கடினமாக உழைக்க முடியும். இது குறி த்து நிறைய கனவு காணுங்கள். அதற் காக முயற்சி செய்யுங்கள். ஒரு கால த்தில் இது நிறைவேறும். இது எனது எளிய புத்திமதியாகும். 

ஈடுபாடும் கவனமும் இருந்ததால் தான் நான் நிறைய சாதிக்க முடிந்தது. கிரிக்கெட்டில் கண் மூடித்தனமாக கவ னம் செலுத்தினேன். இன்னமும் கிரிக்கெட்டை நான் அதிகமாக நேசிக்கிறேன். இதனால் மக்கள் எனக்கு ஆதரவு தெரி வித்தார்கள். இது எனக்கு பலத்தை அளி த்தது. இதனால் நான் மேலும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. 

நான் கடந்த 23 வருடமாக கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன் றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

மேகாலயா அணி தரப்பில் முதல் பாதி யின் போது, ரொனால்டு கைடான் என்ற வீரர் ஒரு கோல் அடித்தார். இறு தியில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

தேசிய அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 86 நகரங்களில் உள்ள 2,610 பள்ளி களைச் சேர்ந்த 41,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மேற்கண்ட மாணவர்கள் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு தகுதி பெற்று தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago