முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டம்: தொடர்புடைய ஓட்டல் அதிபருக்கு சம்மன்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - ஐ.பி.எஸ். கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ள எழும்பூர் நட்சத்திர ஓட்டல் அதிபருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கூறியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரித்து வரும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன் வழக்கின் முன்னேற்றம் குறித்து சென்னையில் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சென்னையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரை கோர்ட்டு அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

கிட்டி என்ற உத்தம் ஜெயின், ஜஸ்ராஸ் என்ற ராஜா ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிப்பதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளோம். இதற்கான அனுமதி இன்று அல்லது நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதைப்பொறுத்து இருவரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் முக்கிய தகவல்களை பெறுவதற்காக தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. கிரிக்கெட் சூதாட்டத்திற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து எப்படி வந்தது, யார்-யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

எழும்பூர் நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை 30-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டில் சம்மன் கொடுக்கப்பட்டது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்