முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடும் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

டோக்கியோ,மே.29 - இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு கடும் நடவடிக்கைகளை எடுக்க என் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஜப்பானில் 3 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டோக்கியாவில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் மற்றும் தொழலதிபர்களை சந்தித்து பேசினார். நேற்று டோக்கியோவில் உள்ள பெரும் தொழிலதிபர்களுடன் நடந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஜப்பான் தொழிலதிபர்களை ஈர்க்கும் வகையில் மன்மோகன் சிங் பேசினார். அவர் மேலும் கூறுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் விரைவான முன்னேற்றத்திற்கும் கடினமான நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொள்ளும் என்றார். நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். கடந்தாண்டு 5 சதவீத வளர்ச்சியானது தற்காலிகமான ஒரு தடங்கல்தான் என்றும் மன்மோகன் சிங் விளக்கி கூறினார். இந்தியா விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதன் பலன்களையும் மக்கள் உணர்ந்துள்ளனர். சில்லரை, எரிசக்தி, சிவில் விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு அதிக அளவில் இருக்கும் வகையில் சட்டவிதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தியா விரைவில் 8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்