முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 ஆண்டு முடிந்தாலும் ஆயுள் கைதி விடுதலை கோர முடியாது

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 29 - 14 ஆண்டு காலம் சிறைவாசம் முடிந்தாலும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை கோர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், ஜே.எஸ். சேகர் ஆகியோரடங்கிய பெஞ்ச் பாலியல் வழக்கு தொடர்பான மனு ஒன்றை விசாரித்தது. அருணாசலபிரதேசத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2009 ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. ஆனால் அதை கவுகாத்தி ஐகோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை குற்றவாளி அனுபவித்து வந்தார். 

இந்த நிலையில் 14 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து விட்டதால் தன்னை விடுவிக்க கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்தார். அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்ததே ஆயுள் தண்டனையாகும். நாட்டின் ஜனாதிபதியும், கவர்னரும் மட்டுமே குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்ய முடியும் என்று தெரிவித்தது. ஐகோர்ட்டால் தண்டனை குறைப்பு செய்த குற்றவாளிக்கு குற்றத்தின் தன்மையை தீவிரமாக ஆராய்ந்து மன்னிப்பு அளிக்கும் உரிமை அம்மாநில அரசுக்கே உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago