முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ செலவுக்கு பாராசூட்டில் இருந்து குதித்த தாத்தா

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே. 29 - ஒஹாயோவைச் சேர்ந்த 87 வயது முதியவர் நுரையீரல் கோளாறால் அவதிப்படும் தனது 10 மாத கொள்ளுப்பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார். 

அமெரிக்காவின் தென்மேற்கு ஒஹாயோவில் உள்ள டிபேர்பீல்டைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர்(87). இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட விமானப்படை வீரர். அவரது 10 மாத பேரக்குழந்தை ஜூலியான் கவுச். ஜூலியானுக்கு நுரிைரல் கோளாறு உள்ளதால் கொலம்பஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு நுரிைரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட கிளாரன்ஸ் கடந்த சனிக்கிழமை பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார். முன்னதாக அவர் தன்னுடைய 85 வது வயதில் பாராசூட்டில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 1944-47 ல் ராணுவ வீரராக இருக்கையில் ஜப்பானில் கடைசியாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்