முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் மீது தேசதுரோக வழக்கு: நவாஸ் கட்சி அறிவிப்பு

புதன்கிழமை, 29 மே 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர், மே. 30 - பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(என்) தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.பி. தாரிக் அஸீம் தெரிவித்துள்ளார். 

தனது ஆட்சியின் போது அவசர நிலையை அமல்படுத்தி நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுத்தது, பலுசிஸ்தானில் முக்கிய பிரமுகர் அக்பர் பக்டியை ராணுவ நடவடிக்கை மூலம் கொன்றது ஆகிய வழக்குகளில் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பாகிஸ்தானில் ஒருவர் மீது தேச துரோக வழக்கை அரசுதான் தொடர முடியும் என்ற சட்டம் உள்ளது. 

ஆனால் முஷாரப் மீது வழக்கு தொடர தனக்கு அதிகாரம் இல்லை என்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான் அது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்றும் தற்போது ஆட்சியில் உள்ள இடைக்கால அரசு தெரிவித்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(என்) கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. 

இதை தொடர்ந்து அக்கட்சியின் எம்.பி. தாரிக் அஸீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

முஷாரப் மீது தனிப்பட்ட முறையில் தனக்கு பிரச்சினை ஏதுமில்லை என்றும், அதே சமயம் அரசியல் சாசன சட்டத்தை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் உறுதியாக உள்ளார். அதன்படி ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடருவோம். அவர் செய்த தவறுக்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்