முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனிவாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் என்ன?

புதன்கிழமை, 29 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 30 - பி.சி.சி.ஐ. யின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்படக் கூடாது எனக் கருதியே ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சீனிவாசனுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். 

சீனிவாசனுக்கு எதிராக சென்றால் அவருடைய ஆதரவாளர்களிடம் இருந்து 10 முதல் 15 வாக்குகளை பெற முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் காந்தியடிகள் சொன்ன 3 குரங்குகளை போன்று எதையும் பார்ப்பதில்லை. கேட்பதில்லை. பேசுவதில்லை என்ற ரீதியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பி.சி.சி.ஐ. யில் உள்ள அனைவரும் கூட்டாக செயல்படுகிறார்கள். இதுதான் பி.சி.சி.ஐ. உறுப்பினர்களின் தற்போதைய நிலை. 

பொதுவாழ்வில் நேர்மை மற்றும் தூய்மையை பற்றி பேசுபவர்கள் சீனிவாசன் ராஜினாமா பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி அறிய விரும்புகிறேன் என்றார். சீனிவாசனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. சுழற்சி முறை அடிப்படையில் பி.சி.சி.ஐ. யின் அடுத்த தலைவராக வருவதற்கு வடக்கு மண்டலத்தை சேர்ந்த அருண் ஜெட்லிக்கு வாய்ப்புள்ளது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண்ஜெட்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்