முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனிவாசன் பதவி விலக சுக்லா - ஜெட்லி வலியுறுத்தல்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 30 - மருமகன் மீதான பிக்சிங் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐ.பி.எல். தலைவர் ராஜிவ் சுக்லா, பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனிவாசன் இதனை நிராகரித்து வருகிறார். இந்நிலையில் ஐ.பி.எல். தலைவர் ராஜிவ் சுக்லா, பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் அருண் ஜெட்லியை நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா, 

சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அருண் ஜெட்லியும் நானும் என்ன நினைக்கிறோம் எனில் இந்த பிக்ஸிங் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். தற்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனின் பரிந்துரைகள் பி.சி.சி.ஐ. க்கு அனுப்பாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனால் சீனிவாசன் பதவி விலக வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்