முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்மாவை 78 தடவை கத்தியால் குத்திய நக்சலைட்டுகள்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஜக்தல்பூர், மே. 30 - சத்தீஸ்கரில் நடந்த பேரணியின் போது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா பலியானார். அவரை நக்சலைட்டுகள் 78 முறை கத்தியால் குத்தியுள்ளது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடந்தது. இந்த பேரணியில் சாதாரண மக்களைப் போன்று உடை அணிந்த 250 நக்சலைட்டுகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மாவை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பலியான கர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் நக்சலைட்டுகள் கர்மாவை துப்பாக்கியால் பலமுறை சுட்டதுடன், கூர்மையில்லாத பொருளால் தாக்கி காயப்படுத்தியுள்ளதும், கத்தியால் 78 முறை குத்தியதும் தெரிய வந்துள்ளது. பேரணியில் குறைந்தது 500 நக்சலைட்டுகளாவது கலந்து கொண்டு தாக்கியிருக்கக்கூடும் என்று மாநில உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago