முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனிவாசன் பதவி விலக வேண்டும்: அமைச்சர் ஜிதேந்திரசிங்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 30 - ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் மருமகன் குருநாத் கைதாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என். சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் வலியுறுத்தியுள்ளார். 

சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் தாம் பதவி விலக முடியாது என்று அவர் மறுத்து வருகிறார். இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

தார்மீக அடிப்படையில் விசாரணை முடிவடையும் வரை சீனிவாசன் பதவியில் இருந்து விலக வேண்டும். அனைத்து விளையாட்டுகளிலும் நடைபெறும் முறைகேடுகளை சட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை அமைச்சகம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும். மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தொடர்பான புதிய சட்ட மசோதா மீதான கருத்தை விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 

அதே நேரத்தில் பிக்ஸிங்கை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற செய்திகளில் உண்மையில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் கருத்தை விளையாட்டுத் துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்த பிக்ஸிங் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பது. மத்திய அரசின் கீழ் இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதே நேரத்தில் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க எந்த ஒரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று ராஜிவ் சுக்லா, அருண் ஜேட்லி ஆகியோர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்