முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டல் அதிபர் இன்று விசாரணைக்கு ஆஜராகுவாரா?

புதன்கிழமை, 29 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.30 - போலீஸ் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல் அதிபர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை கைது செய்தனர். சுதைாட்டத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் விண்டூ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகர் விண்டூவுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் இடையே இணைப்பு பாலமாக சென்னை நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விக்ரம் அகர்வாலை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விசாரணைக்கு அழைத்து சென்றதாக அவரது வக்கீல் அபுடுகுமார் தெரிவித்தார். ஆனால் இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி போலீசார் மறுத்தனர்.

சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சீனிவாசன் அளித்த பேட்டியில், விக்ரம் அகர்வாலை 30-ந் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டில் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

விக்ரம் அகர்வாலை போலீசார் ஏற்கனவே கைது செய்யவில்லை என அறிவித்துள்ளதால் அவர் எங்கே போனார் என்பதில் மர்மம் ஏற்பட்டுள்ளது. அடையாறு போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டில் காவலாளிகள் மற்றும் வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர். விக்ரம் கபூர், அவரது மனைவி, மகள் ஆகியோர் மாயமாகி விட்டனர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னை நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் 30-ந் தேதிக்குள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்றுதான் ஆஜர் ஆக வேண்டும் என்பதில்லை. இன்றைக்குள் எப்போது வேண்டுமானாலும் ஆஜர் ஆகலாம்.

ஆனால் இதுவரை அவர் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர் இன்று போலீஸ் விசாரணைக்காக ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கிறோம். இன்று அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தி நடிகர் விண்டூ, குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கும், விக்ரம் அகர்வாலுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் விசாரிக்க உள்ளோம். விக்ரம் அகர்வாலுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் சென்னை எழும்பூரில் உள்ளது. அங்கு வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது பற்றியும் விசாரிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கடந்த 4 நாட்களாக தலைமறைவாக உள்ளார். போலீசுக்கு பயந்து அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் போலீசில் சரண் அடைந்தனர். அதன் பிறகு தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே விக்ரம் அகர்வாலும் நாளை போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று தெரிகிறது. அவரை விசாரிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் சர்வதேச தொடர்பு பற்றி தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்