முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``மே தினம்'' தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்

சென்னை, மே.- 1 - இன்று உலகமெங்கும் உழைப்பாளி மக்களால் மே தினம் மிகச்சிறப்பானது. தமிழகத்திலும், மே தினத்தை தொழிற்சங்கள் அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இதையொட்டி தலைவர்கள் மே தின வாழ்த்து கூறியுள்ளனர். அவை வருமாறு:-
முதல்வர் கருணாநிதி:
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டnullர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்! மேதினி போற்றும் இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது இதயம் கனிந்த மேதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர்  விஜயகாந்த்: உழைப்பவருக்கு உயர்வு தேடுகின்ற நாள் மே நாளாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. எவ்வாறு பறவைகள் பறந்து இரை தேடுகின்றனவோ, மீன்கள் nullந்தி இரை தேடுகின்றனவோ, ஊர்வன ஊர்ந்து உணவு தேடுகின்றனவோ அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும், ஒருவரை இன்னொருவர் சுரண்டியும், ஒருவர் பொருளை இன்னொருவர் திருடியும் வாழ்வதென மனிதர்களுக்கிடையே தீயப் பழக்கங்கள் கால வேகத்தில் உண்டாகி விட்டன. எல்லோரும் உழைத்து வாழ்வதன் மூலமே இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட முடியும். உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து ஒரு சிலர் சுக வாழ்வு நடத்துவதும், மிகப் பலர் வறுமையில் வாடவுமான நிலை ஏற்படுகிறது. சமுதாயத்தின் அமைப்பை மாற்றி எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தே.மு.தி.கவின் இலட்சியமாகும். வறுமையை ஒழித்து எல்லோருக்கும் வாழ்வு கிடைக்க வழி தேடுவதே நமது திட்டமாகும். சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். இவ்வாறு விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:​
அன்றுமுதல் இன்றுவரை 122 ஆண்டுகளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு, மாமேதை லெனின், சிறையில் இருந்தவாறு, மே முதல் நாளை, ஒரு போராட்ட தினமாக தொழிலாளர்கள் அறியச் செய்து, ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள். ரஷ்யப் புரட்சியும், சீனப்புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.இப்போது நம் கண்ணெதிரே இலங்கைத் தீவில், கொடியவன் இராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை நடத்தி விட்டது. இக்கோரக் கொலைகளை நடத்திய இராஜபக்சே, உண்மையை வெளிக்கொணர்ந்து ஐ.நா. மன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை எதிர்த்து, சிங்களக் காடையர்ளை, மே 1 ஆம் நாள் கொழும்பில் திரட்டுகிறான். அவனது மண்டைக் கொழுப்புக்கும், மாபாதகத்துக்கும் மரண அடி கொடுக்க அனைத்து நாடுகளின் மனசாட்சியைத்தட்டி எழுப்ப, கொடியோனைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க, மனித உரிமை உணர்வுடையோர் அனைவரையும், மே தினம் அறைகூவி அழைக்கிறது. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும், இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்:
உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் எழுப்பும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே நந்நாளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டில் எண்ணற்ற பெரும் இயக்கங்களை விலைவாசி உயர்வுக்கு எதிராக, சமூகக் கொடுமைகட்கு எதிராக, ஊழல்களை எதிர்த்து, மாவோயிஸ்டு ஒழிப்பு என்ற பெயரால் பழங்குடி மக்களை அழிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, இந்திய நாட்டின் இயற்கை கனிமவளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து, மணற்கொள்ளையை எதிர்த்து, மின்வெட்டால் பாதிக்கப்பட்ட தொழில்களால் வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்காக, எனப் பல அடுக்கடுக்கான இயக்கங்களை நடத்தியது இந்தியத் தொழிலாளி வர்க்கம்.
உலக அரங்கில் ஜப்பானில் இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட உயிர், உடமைச் சேதங்களுடன் அணுமின் நிலயம் உடைந்து கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட கோர நிகழ்ச்சி, பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற மக்கள் நடத்திய மாபெரும் கிளர்ச்சிகள் ஆகியவற்றின் அனுபவங்களையும் பெற்றுள்ள இந்தியத் தொழிலாளி வர்க்கம் 2011 மே தினத்தையும் கடைப்பிடிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரால் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் கோடி, ஊழலால் இழந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியும், கடத்தி பதுக்கப்பட்ட 120 லட்சம் கோடியும் இந்திய மக்களை ஏழ்மைக்குள் தள்ளியிருப்பதையும் எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்க வேண்டும். இலங்கை வாழ் தமிழ் குடிமக்களை கொன்றழித்த போர்க்குற்றவாளிகளை சர்வதேசச் சட்டப்படி பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், மேற்குவங்கத்தில் 1995​ல் ஆயுதங்களைக் கொண்டு வந்து விமானம் மூலம் கலவரக்காரர்களுக்குக் கொடுத்து கலவரத்தைத் தூண்ட உதவிய கட்சிகள், அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மே தின சூளுரையாக ஏற்று வலியுறுத்த வேண்டி, மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
தொழிலாளர் தோழர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மே நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிற சூழல் உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்குரிய உரிமைகளை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சுருங்கி போய்விட்ட நிலையில் தனியார் நிறுவனங்களே இப்போது பெரும்பாலான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சமூகநீதிக் கொள்கைக்கு மாறான விதத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இந்த போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சார்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும். எனவே தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை மே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பரந்துபட்ட பிரச்சாரம் இயக்கம் ஒன்றை கருத்தொற்றுமை உள்ளவர்களோடு இணைந்து விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுக்கு என்பதை இந்த மேநாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago