முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ரயில் பாதை: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.30 - ஜம்மு-காஷ்மீர் பகுதியை இணைக்கும் 18 கிலோ மீட்டர் ரயில்பாதையை பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாதம் தொடங்கி வைக்கிறார்.  காஷ்மீர் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு சுமார் 5 மாதங்களாகின்றன. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் தீவிரவாத பிரிவுகள் மற்றும் பிரிவினைவாத சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்களையும் நடத்தின. இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தில் சமாதான சமிஞ்கையாக ரயில்பாதையை பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாதம் 25-ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் கடைசியில் இருக்கும் பனிஹாலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆரம்பத்தில் உள்ள குவாஜிகுந்து வரை 17.7 கிலோ மீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை கடந்த 114 ஆண்டுகளின் கனவு நினைவாகும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதனால் பயண நேரமும் சுமார் 20 நிமிடங்களில் இருந்து 25 நிமிடங்கள் வரை குறையும். இந்த ரயில்பாதையானது நாட்டிலேயே மிகவும் நீளமான பீர் பஞ்சால் குகை பாதையும் உள்ளடக்கியதாகும். இந்த பாதை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகை பாதை சுமார் 11.2 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இதற்கு பெயர் டி80 அல்லது பீர் பஞ்சால் குகை என்று பெயராகும். ஆஸ்திரிய நாட்டின் விதிமுறைகளின்படி இந்த குகை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பாதையானது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்பாதையை இணைக்கக்கூடியதாகும். இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்பும் நவாஸ் ஷெரீப்புக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த ரயில்பாதை திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் செல்கிறார். இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரிவான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின்போது காஷ்மீர் புகழ்பெற்ற கவிஞர் குலாம் அகமத் மெஹ்ஜோர் நினைவாக தபால் தலையையும் மன்மோகன் சிங் வெளியிடுகிறார். கடந்த 1898-ம் ஆண்டே காஷ்மீரை ஆண்ட மறைந்த மன்னர் மகாராஜா பிரடாப் சிங், இந்த ரயில்பாதையை அமைக்க வேண்டும் என்று கருத்தை தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்