முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் சுட்டதில் 7 போலீசார் பலி

புதன்கிழமை, 29 மே 2013      உலகம்
Image Unavailable

 

காந்தகார், மே. 30 - போலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் தீவிரவாதிகள். இச்சம்பவத்தில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரபு வசந்தம் என்ற பெயரில் கடந்த மாதம் அதிரடித் தாக்குதலை ஆரம்பித்த இவர்களின் தற்போதைய முக்கிய குறிக்கோள் ஆப்கன் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை கொல்வது தான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காந்தகார் மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிக்கு வந்த இரண்டு நபர்களுக்கு அங்கேயே தங்க அனுமதியும் அளித்து, இரவு உணவும் வாங்கிக் கொடுத்து உபசரித்துள்ளனர் பணியில் இருந்த போலீசார். ஆனால், சாப்பிட்டு முடிந்த கையோடு, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக போலீசாரை நோக்கி சுட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் போலீஸ் ஜீப்பிலேயே, சோதனைச்சாவடியில் இருந்த ஆயுதங்களை அள்ளி போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தாக்குதல் நடத்திய 2 பேரும் இதற்கு முன்னர் காவல்துறையில் பணியாற்றியவர்கள். ஆனால் வேலையை விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் மீண்டும் போலீசில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் விருந்து சாப்பிட்டதும் போலீசாரையே கொன்றுவிட்டனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்