முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மருமகனுக்கு ஒண்ணும் ஆகாது: சீனிவாசன்

புதன்கிழமை, 29 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 30 - டெல்லி மருமகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் தனது மருமகனுக்கும் ஒன்றும் ஆகாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளாராம். ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார். இதையடுத்து சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்று நினைத்த சீனிவாசனின் முடிவை மாற்றியது பெங்காள் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜக்மோகன் டால்மியா தானாம். கடந்த சனிக்கிழமை நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் டால்மியா சீனிவாசனிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வெளியே உள்ளவர்கள் தான் உங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அதனால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்தே நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சீனிவாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறாராம்.

தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொண்ட சீனிவாசன் வாரிய உறுப்பினர் ஒருவரிடம், டெல்லி மருமகனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் என் மருமகனுக்கு ஒன்றும் ஆகாது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராப்ர்ட் வதேரா தனக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து நிதி விஷயங்களில் லாபம் அடைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசனை ராஜினாமா செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago