முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை

புதன்கிழமை, 29 மே 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மே. 30 - இலங்கையில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகளின் மனைவிகள் இலங்கை ராணுவத்தினரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது. இலங்கை திரிகோணமலை பகுதியில் வாழும் முன்னாள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அவ்வப்போது விசாரணை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்படுவது உண்டு, அத்தகைய சூழ்நிலைகளில் அவர்களை காவலில் அடைத்துவிட்டு அந்த குடும்பத்தின் பெண்களிடம் இலங்கை ராணுவத்தினர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துக் கொள்வது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 4 ம் தேதியன்று இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களை அடுத்து கட்டாய்-பாரிச்சான் ராணுவ முகாமில் இருந்து வந்த வீரர்களால், மூத்தூர் என்ற இடத்தில் இருந்து 16 தமிழர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் திருமணமானவர்கள். சிலரின் மனைவிகள் முன்னாள் பெண் புலிகள். கணவன்மார்களை சிரையில் அடைத்து விட்டு, வீட்டில் தனியாக இருக்கும் அவர்களது மனைவிகளை இலங்கை ராணுவத்தினர் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனராம். 

இது குறித்து, மூத்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பெண் புலியான கந்தபோடி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை கற்பழிக்க ராணுவத்தினர் முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களர்களும் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இரு வாரங்களுக்கு முன்னர், கந்தபோடி தனது குடிசையில் தனியாக இருந்தபோது நள்ளிரவில் குடிசைக்குள் நுழைந்த நபர் ராணுவ புலனாய்வு துறை அதிகாரி என்று கூறிக் கொண்டு அவரை கற்பழிக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்