முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்தில் இரு சாலை விபத்துகளில் 11 பேர் பலி

வியாழக்கிழமை, 30 மே 2013      இந்தியா
Image Unavailable

 

சாப்ரா, மே.31 - பீகார் மாநிலத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஒரு பெண், 6 குழந்தைகள், உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

சரன் மாவட்டத்தில் மனோபலி பிப்ரா என்ற கிராமத்தில் இந்த விபத்து  நடந்தது. இதில் திருமண கோஷ்டி சென்ற ஜீப் மரத்தில் மோதிய பின் கவிழ்ந்தது. இதில் 4 குழந்தைதள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். 

சசார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு  திரும்பும்போது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்தது. இதில் 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 4 பேர் சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

   சரண் மாவட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற முதல்வர் நிதீஷ்குமார் இந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 பங்கா மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர். இவர்கள் சென்ற கார்  பயணிகள் பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நடந்தது. கடோகியா காவல் நிலையப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் புஷ்க்ர ஆனந்த் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஹோமியோபதி டாக்டர் பிரிஜிநந்தன். அவரது மனைவி பபிதா தேவி, நன்ஹி குமாரி, புல்புல்குமாரி ஆகிய இரு குழந்தைகள் ஆகியோர் இறந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago