முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை திரும்பி பார்க்க மாட்டேன்: எடியூரப்பா பேட்டி

வியாழக்கிழமை, 30 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,மே.31 - எங்கள் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி வரும் பாரதீய ஜனதாவை மீண்டும் திரும்பி பார்க்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.  இது குறித்து எடியூரப்பா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது, கர்நாடக சட்டசபை தேர்தல் மிக அருகில் இருந்த போது நாங்கள் கட்சியை துவக்கினோம். கட்சி சினனம், பெயர், வேட்பாளர்கள் போன்ற அனைத்தும் புதிதாக இருந்தன. பிரசாரம் செய்யவும் காலம் குறைவாக இருந்தது. இதனால் நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை நாங்கள்தனியாக சந்திக்கும் அளவுக்கு எங்கள்கட்சிக்கு இன்னும் பலம் வரவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டியதுள்ளது. பாரதீயஜனதாவை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கமாட்டேன். ந்த கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள் யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை.

   எங்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் புதிய கட்சி தொடங்கியதில் இருந்தே எங்களுக்கு எதிராக சிலர் குழப்பதை உண்டாக்கி வருகிறார்கள். இது அத்தகைய தலைவர்களுக்கு நல்லதல்ல. பாரதீய ஜனதாவில் மீண்டும் இணையும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago