முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல மேற்குவங்க இயக்குனர் மாரடைப்பால் மரணம்

வியாழக்கிழமை, 30 மே 2013      சினிமா
Image Unavailable

 

கொல்கத்தா, மே.31 - பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற இயக்குனருமான ரிது பர்னோ கோஷ் நேற்றுக்காலையில் மாரடைப்பால் தனது கொல்கத்தா இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 49.

இந்த 49 வயதிலும் இவர் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். கிட்டத்தட்ட 12 தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றுக்காலை 7,30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 1994-ல் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கி இவர் புகழ் பெற்றார். இவரது திரைப்படமான யுனிசி ஏப்ரல் 1995-ல் தேசிய விருதை தட்டிச்சென்றது. அடுத்தடுத்து பல்வேறு விருதுகளை இவர் பெற்றார். இவரது மறைவு செய்தி மேற்குவங்க திரையுலகை அதிர்ச்சிடையவைத்துள்ளது. இந்த செய்தியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நல்ல இயக்குனரை இளம் வயதில் இழந்துவிட்டோம் என்று திரையுலக பிரமுகர்கள் தெரிவித்தனர். பல்வேறு நடிகர், நடிகைகளும் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியும் கோஷ் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

மரணமடைந்த வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தன் 49 வயதில் தன் படங்களுக்காக 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த திரைப்பட இயக்குநரும் செய்யாத சாதனை இது. 20 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இயங்கிய ரிதுபர்னோ கோஷ், 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் 2 இந்திப் படங்கள். 4 படங்களில் நடித்துள்ளார்.

16 படங்களுக்கு தேசிய விருது இவரது இயக்கத்தில் வெளியான 19 படங்களில் 16 படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கிடைத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கையும் 19-தான். இந்தியில் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், இவரது வங்காளப் படத்தில் நடித்துவிட ஆர்வம் கொண்டிருந்தனர்.

ஐஸ்வர்யா ராய் அப்படி விரும்பிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் சோக்கர் பாலி எனும் வங்காளப் படத்தில் அவர் நடித்தார். இந்தப் படம் பின்னர் இந்தி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சிறந்த வங்க மொழி படத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.

உனிஷே ஏப்ரல் ரிதுபர்னோ கோஷின் முதல் படம் ஹிரேர் அங்டி-க்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது படம் உனிஷே ஏப்ரல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றது. தேபஸ்ரீராய்க்கு (மனைவி ரெடி படத்தில் பாண்டியராஜன் ஜோடியாக நடித்தவர் இவர்தான்) கிடைத்த முதல் விருது இது.

தாஹன் ரிதுபர்னோ இயக்கிய மூன்றாவது படமான தாஹன் 1997-ல் வெளியானது. இந்தப் படத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது ரிதுபர்னோ கோஷூக்கும், சிறந்த நாயகிகளுக்கான விருது இந்திராணி ஹால்டர், ரிதுபர்னா சென்குப்தாவுக்கும் கிடைத்தது.

பரிவாலி இந்தப் படத்துக்கும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது கிரண் கெர்-க்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது சுதிபா சக்ரபர்த்திக்கும் கிடைத்தது.

சிறந்த இயக்குநர் முதல் விருது ரிதுபர்னோ கோஷ் அடுத்து இயக்கிய அசுக், சிறந்த படத்துக்கான விருதினையும், அதற்கடுத்து வெளியிட்ட உத்ஸப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினையும் வென்றார். சிறந்த இயக்குநராக அவர் பெற்ற முதல் விருது இது. 2002-ல் அவர் வெளியிட்ட டிட்லி மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை.

ரெயின் கோட் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் இந்திப் படம் இந்த ரெயின்கோட். இந்தி மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதினை இந்தப் படம் வென்றது. அடுத்த படமான அந்தர் மஹால் விருதுகள் எதையும் பெறவில்லை.

முதல் ஆங்கிலப் படம் ரிதுபர்னோ இயக்கிய முதல் ஆங்கிலப் படம் தி லாஸ்ட் லியர். இந்தப் படம் ஆங்கில மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 2008-ல் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய இரண்டு படங்கள் கேலா மற்றும் ஷோப் சரித்ரோ கல்போனிக். இதில் ஷோப் சரித்ரோ கல்போனிக் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது வென்றது.

அபோஹோமன் 2010-ல் இந்தப் படம் வெளியானது. சிறந்த இயக்குநர் (ரிதுபர்னோ கோஷ்), சிறந்த நடிகை (அனன்யா சாட்டர்ஜி), சிறந்த படம் ஆகிய மூன்று தேசிய விருதுகளை அள்ளியது இந்தப் படம். அதே ஆண்டில் நெளக்காடுபி என்ப படத்தை வெளியிட்டார். ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.

சித்ராங்கதா 2011-ல் எந்தப் படத்தையும் ரிதுபர்னோ கோஷ் இயக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இரு படங்களை இயக்கினார். இவற்றில் சன்கிளாஸ் என்ற இந்திப் படமும் ஒன்று. இதற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சித்ரங்கதா என்ற வங்காள மொழிப் படத்துக்காக கடந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார் ரிதுபர்னோ கோஷ்.

சர்வதேச அங்கீகாரம் ரிதுபர்னோ கோஷ் படங்கள் இடம்பெறாத சர்வதேச திரைப்பட விழாக்கள் மிகச் சிலதான். அந்த அளவு சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago