முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத தாக்குல்: வி.சி.சுக்லா உடல்நிலையில் முன்னேற்றம்

வியாழக்கிழமை, 30 மே 2013      இந்தியா
Image Unavailable

 

கூர்கான்,மே.31 - சத்தீஷ்கரில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.சி.சுக்லாவின் உடல்நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அதேநேரம் அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. திடீர் திடீரென்று தாக்குதல் நடத்தி இந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். இவர்களை ஒடுக்க மத்திய அரசு முயன்றும் அந்த முயற்சி பலன் அளித்ததாக தெரியவில்லை. ஆனாலும் தீவிரவாதத்திற்கு அரசு அடிபணியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறி வருகிறார். இந்தநிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தீஷ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர்களின் அணிவகுப்பு பேரணியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் பலியானார்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி.சுக்லா உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்குக்குண்டுகள் காயம் அடைந்த வி.சி.சுக்லா ராய்பூரில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது டெல்லி அருகே உள்ள கூர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாகவும் ஆனாலும் அபாய கட்டத்தை அவர் தாண்டவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது சமயங்களில் விழித்துப்பார்க்கிறார். சுயஉணர்வும் உள்ளது என்று மெதந்தா மருத்துவமனையின் மருத்துவ சூப்பிரண்டு ஏ.கே.துபே செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்