முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூச்சிக்கொல்லி மருந்து எண்டோசல்பானுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      உலகம்
Image Unavailable

ஜெனீவா,மே.- 1 - சுற்றுச்சூழல், உடல் நலத்துக்கு ஆபத்தானதாக கருதப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான எண்டோசல்பானை தடை செய்வதற்கு சர்வதேச மாநாட்டில் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இந்த தடையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.  எண்டோசல்பானை முற்றிலுமாக தடை செய்வதற்கு 11 ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது இதில் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரிம வேதிப்பொருட்கள் தொடர்பான ஸ்டாக்ஹோம் தீர்மானம் குறித்த சர்வதேச மாநாடு கடந்த 5 நாட்களாக ஜெனீவாவில் நடந்தது. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் எண்டோசல்பானை முழுமையாக தடை செய்வதற்கு நீண்ட கால அவகாசம் வழங்குவது, பாதுகாப்பான குறைந்த விலையிலான மாற்று பொருளை கண்டறிவது போன்ற கோரிக்கைகள் வளரும் நாடுகள் சார்பில வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் மாநாட்டில் ஏற்கப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்