முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக் கணக்கில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

வியாழக்கிழமை, 30 மே 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே.31  - வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 20 மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக எரிவாயு மானியத்தொகை செலுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகார வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய அரசு, பயனாளிகளுக்கே அனைத்து மானியத் தொகையையும்  நேரடியாக வழங்கும் நேரடி மானியத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள 20 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக எரிவாயு நுகர்வோர் புதிதாக சிலிண்டர் கோரி பதிவு செய்யும்போது அவர்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகையான ரூ.435 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். கர்நாடக மாநிலம் மைசூர், இமாசலப்பிரதேசம் மாண்டி, மாவட்டங்களில் தேர்தலையொட்டி நேரடி மானியம் வழங்கும்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தும்கூரிலும், இணை அமைச்சர் பனபாக லெட்சுமி ஹைதராபாத்திலும் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். வடக்கு கோவா, புதுச்சேரியைச் சேர்ந்த பயனாளிகள் ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்காக விண்ணப்பிக்கும்போது, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.435 மானியம் செலுத்தப்படும்.

 அவர்கள் எரிவாயு சிலிண்டரை சந்தையில் இரட்டிப்பு விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். முதலில் 20 மாவட்டங்களில் நேரடி மானியத்தின் பலன் எப்படி அமைகிறது என்பதை அறிந்த பின்னர் நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆதார் அடையாள அட்டைகளை அதிக அளவில் பெற்றவர்கள் உள்ளதால் 20 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 ஆதார் எண் பெறாதவர்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். அதாவது செப்டம்பர் மாதம் 1-ம் தேதியிலிருந்து ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே மானியம் தரப்படும். மற்றவர்கள் சந்தை விலையில்தான் எரிவாயு பெற வேண்டும்.   

இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தால்   இதன்மூலம் ரூ. 10,000 கோடி வரை எரிவாயு மானியத் தொகையை

மிச்சப்படுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நேரடி மானியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்டவை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் தொடர்ச்சியாக எரிவாயு மானியத் தொகையும் தற்போது நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்