முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அரசுடன் இனிமேல் பேச்சு இல்லை: தலிபான்கள்

வெள்ளிக்கிழமை, 31 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன்.1 - தலிபான் துணை தலைவர் வாலி உர் ரஹ்மான் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுடன் இனிமேல் பேச்சு நடத்தப் போவதில்லை என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(என்) கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டதும் பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினருடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் வடக்கு வஜ்ரிஸ்தானில் மிரான்ஷா பகுதிக்கு அருகே அமெரிக்க உளவுத் துறையின் ஆளில்லா விமான தாக்குதலில் தெஹ்ரிக் இ தலிபான் துணை தலைவர் வாலி உர் ரஹ்மான் கொல்லப்பட்டார். இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இசானுல்லா இஷான் கூறியதாவது, 

வாலி உர் ரஹ்மான் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது தியாகத்தை போற்றுகிறோம். பாகிஸ்தான் அரசு தகவல் தராமல் இந்த தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தியிருக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடந் இனி மேல் எந்தவிதமான பேச்சும் நடத்தப் போவதில்லை. வாலி உர் ரஹ்மானின் மரணத்துக்கு பழிவாங்குவோம். தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். வாலி உர் ரஹ்மானின் மறைவை அடுத்து தெஹ்ரிக் இ தலிபான் துணை தலைவராக கான்  சயீத் என்ற சாஜ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்