முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.22 - எனது பிறந்தநாளைவிட கருணாநிதி குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஜெயலலிதா தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியின் உடன்பிறப்புகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்கள் வருமாறு:-

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சிந்தனையோடு வாழ்ந்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.  இதற்கு முற்றிலும் மாறாக எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.  விண்ணை முட்டும் விலைவாசி, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீnullர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இது தவிர, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல், கொலை, கொள்ளை, என அனைத்து சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.  பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.  அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிnullர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள் காரணமாக மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம்​ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம், உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி. 

இந்த ஊழல் மூலம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் கருணாநிதி குடும்பத்தினர் ஆபத்தை விளைவித்து இருக்கின்றனர்.  திரைப்படத் துறை, கட்டுமானத் துறை என ஒவ்வொரு துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.  மொத்தத்தில், ஒரு குடும்பத்தின் அடிமைகளாக தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  இந்தக் கொடுங்கோல் ஆட்சியை, நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மூலம் அகற்றுவதற்கான பணிகளில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.  இந்தத் தருணத்தில், எனது பிறந்த நாளை கொண்டாடுவதை விட ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்.   பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை.  இருப்பினும், என் உயிரினும் மேலான எனதருமை கட்சி உடன்பிறப்புகள், எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கருதினால், ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களில் கழக உடன்பிறப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட எனது பிறந்த நாளன்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, அதை நிறைவேற்றிடும் வகையில் கழக உடன்பிறப்புகள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.  இதற்கேற்றாற் போல் கட்சி உடன்பிறப்புகளுடைய களப் பணி அமைய வேண்டும். குடும்ப ஆட்சி அழிந்து நல்லாட்சி அமையும் நாளே தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள் என்பதால், அனைத்து மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களையும் அந்த வெற்றித் திருநாளன்று வைத்துக் கொள்ளலாம் என்று எனதருமை கட்சி உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கட்சியின் உடன்பிறப்புகளுக்கு கேட்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago