முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி., 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

சனிக்கிழமை, 1 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 2 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர் குப்டில் அபார மாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத் துச் சென்றார். அவருக்குப் பக்கபலமா  க, டெய்லர் மற்றும் எலியட் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, செளதீ, எல். மெக்குல்லம், மெக்லினாகன் மில்ஸ் மற்றும் வில்லியம்சன் ஆகி யோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியின் ரன் ரே ட்டைக் கட்டுப்படுத்தியது. 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி நிர் ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், டிராட் அதிகபட்சமாக, 53 பந்தில் 37 ரன் எடுத் தார்.  இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் கூக் 30 ரன்னையும், வோக்ஸ் 36 ரன்னையும், ஜோ ரூட் 30 ரன்னையும், பிரஸ்னன் 25 ரன்னையும், பெல் 18 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், செளதீ 37 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, மெக்லினாகன், எல். மெக் குல்லம் தலா 2 விக்கெட்டும், மில்ஸ் மற்றும் வில்லியம்சன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 228 ரன்னை எடுத் தால் வெற்றி பெறளாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. அடு த்து களம் இறங்கிய அந்த அணி 46.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் னை எடுத்தது. 

இதனால் இந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத ன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த த் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன் னிலை பெற்று உள்ளது. 

நியூசிலாந்து அணி தரப்பில் துவக்க வீர ர் மெக்குல்லம் அபாரமாக ஆடி சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகு ம். அவர் 123 பந்தில் 103 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். 

டெய்லர் 77 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, எலியட் 27 ரன்னையும், பிராங்ளின் 14 ரன்னையும், எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, டெர்ன்பேச் மற்றும் ஸ்வான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக குப்டில் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்