முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட தரகருக்கு சிக்னல் கொடுக்க மறந்த சண்டிலா..!

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூன். 3 - ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான வீரர்களில் ஒருவர் அஜித் சண்டிலா. பல்வேறு சூதாட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது டெல்லி போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சண்டிலா மே மாதம் 5-ந்தேதி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் தனது 2-வது சூதாட்ட தரகருக்கு அளித்த வாக்குறுதிப்படி 14 ரன் கொடுத்தார். ஆனால் சூதாட்ட தரகரிடம் அந்த ஓவருக்கான சிக்னலை கொடுக்கவில்லை. இதனால் சூதாட்ட தரகரால் பெட்டிங் செய்ய முடியவில்லை. சமிஞ்சை அளிக்காததால் சூதாட்ட தரகர்கள் அவரிடம் கொடுத்த ரூ.20 லட்சத்தை கட்டாயமாக திருப்பி பெற்றனர்.

டெல்லி போலீசார் முதல் முதலாக அளித்த பேட்டியில் இதை தெரிவித்தனர். இந்த நிலையில் அஜித் சண்டிலா மற்றொரு ஆட்டத்திலும் சூதாட்ட தரகருக்கு பெட்டிங் செய்வதற்கான சிக்னலை கொடுக்க மறந்தது தற்போது தெரியவந்துள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திலும் சண்டிலா ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் குறிப்பிட்ட ஓவரில் அவர் சூதாட்ட தரகருக்கு சிக்னல் கொடுக்க மறந்துவிட்டார்.

இதை டெல்லியில் பிடிபட்ட சூதாட்ட தரகர் அஸ்வின் அகர்வால் என்ற டிங்கு மும்பை போலீசில் தெரிவித்துள்ளார். 6-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்திற்காக சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் பணத்தை அஸ்வின் அகர்வால் அளித்துள்ளார். சுனில் பாட்டியா மூலம் அந்த பணம் டெல்லி அசோகா ஓட்டலுக்கு வெளியே கடந்த 28-ந்தேதி அளிக்கப்பட்டது.

மும்பை அணிக்கு எதிரான ஏப்ரல் 17-ந்தேதி நடந்த போட்டியில் செயினை இழுத்து முத்தம் கொடுப்பது என்பது சிக்னல் ஆகும். ஆனால் இந்த சிக்னலை கொடுக்க சண்டிலா மறந்துவிட்டார். இந்தப்போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றதால் அஸ்வின் அகர்வாலுக்கு ரூ.50 லட்சம் இழப்பு ஏற்பட்டது. சிக்னலை கொடுக்க மறந்ததால் சண்டிலாவிடம் கொடுக்கப்படும் பணத்தை கட்டாயப்படுத்தி 2 முறையும் சூதாட்ட தரகர்கள் வாங்கிவிட்டனர். போலீஸ் விசாரணையில் சூதாட்ட தரகர் அஸ்வின் இதை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்