முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசை விமர்சித்த சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி பறிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன். 3 - அரசு திட்டங்கள் குறித்து விமர்சித்த ஆந்திர பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் டி.எல். ரவீந்திர ரெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் இரவு தான் அவர் ஊர் திரும்பினார். இந்நிலையில் அரசு திட்டங்களை விமர்சித்த காரணத்திற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எல். ரவீந்திர ரெட்டியை நேற்று முன்தினம் இரவு பதவி நீக்கம் செய்தார். ரவீந்திர ரெட்டிக்கு ஏற்பட்ட நிலை மேலும் ஒன்று அல்லது 2 க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு விரைவில் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

ரவீந்திர ரெட்டி தனது குடும்பத்தாருடன் லண்டனில் உள்ளார். அவர் வரும் 4ம் தேதி ஆந்திரா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரண் குமார் ரெட்டி முதல்வரானபோது கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.வான ரவீந்திர ரெட்டி அமைச்சராக்கப்பட்டார். ஆனால் அவர் முதல்வரைப் பற்றி கடுமையாக விமர்சிக்கத் துவங்கினார். முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து வெளிப்படையாக குற்றம் சாட்டினார். முன்னதாக அரசையும், அரசு திட்டங்களையும் விமர்சித்ததற்காக பி. சங்கர் ராவ் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்